திருப்பூர்,
திருப்பூரில், கோவை மண்டல மின்வாரிய அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மின்வாரியம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆய்வுக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது; விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பே உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கப்படும். மேலும், மின்வாரியத்தில் கடந்த காலங்களில் ரூ.14 ஆயிரம் கோடி நஷ்டம் என்பது,தற்போது ரூ.3 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது. திமுக கொள்கை ரீதியில் எதிர்கட்சியானாலும் அரசியல் நாகரீகம் கருதி கலைஞரை சந்தித்து உடல் நலம் விசாரித்தோம் என்றார்.தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் 6,718 இருந்த நிலையில், தற்போது 3,886 கடைகள் மட்டுமே செயல்படுகின்றது. மேலும், விவசாயிகளுக்கு கடந்தாண்டு தட்கல் முறையில் வழங்ககூடிய 9,946 மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: