மாஸ்கோ:
இருநாடுகளிடையே பேச்சுவார்த்தை நடந்த போது ஒப்புக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை அமெரிக்கா மீறுகிறது என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை, அப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ரஷ்யா இணைத்துக் கொண்ட நிகழ்வை கடுமையாக விமர்சித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
மைக் பாம்பியோ பேசியுள்ள நிலையில்,அதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா எப்போதுமே சொன்ன வார்த்தைகளை நிறைவேற்றுவதில்லை எனவும் கூறியுள்ளது. ஈரான் அணுசக்தி உடன்பாட்டிலிருந்து வெளியேறியது, பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டிலிருந்து வெளியேறியது போன்ற நிகழ்வுகள் இதற்கு சாட்சி என்றும் ரஷ்யா கூறியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.