தீக்கதிர்

அப்துல்கலாம் நினைவு தினம் : அமைச்சர் எம்.மணிகண்டன் மலர்வளையம் வைத்து மரியாதை…!

இராமநாதபுரம்:                                                                                                                                                                               மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாமின் மூன்றாவது நினைவு தினமான வெள்ளியன்று (ஜுலை 27) இராமநாதபுரம் பேய்க்கரும்பு கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் எம்.மணிகண்டன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.