ஜெய்ப்பூர்:
ஹூமாயூன் தான் இறக்கும் நேரத்தில், பாபரை அழைத்து ‘இந்த நாட்டை ஆள வேண்டுமானால், பசு, பிராமணர்கள், பெண்கள் ஆகியோரை மதிக்க வேண்டும்’ என்று அறிவுரை கூறினாராம். ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் லால் சைனி, இப்படியொரு புதிய கதையை அவிழ்த்து விட்டுள்ளார். இது வரலாற்று ஆசிரியர்களையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஹூமாயூன் இறப்பதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே பாபர் இறந்து விட்டார். ஹூமாயூனின் அப்பா-தான் பாபர். அப்படியிருக்க, தான் இறப்பதற்கு முன்பே இறந்தபோன அப்பாவை, தான் இறக்கும் நேரத்தில் அழைத்து ஹூமாயூன் எப்படி அறிவுரை கூறியிருக்க முடியும்? என்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: