சென்னை,
வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரியை 100 விழுக்காட்டில் இருந்து 50 ழுக்காடாக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அண்மையில் தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தி அறிவித்தது. இதற்கு சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்துள் ளன. உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. சொத்து வரி உயர்வு மூலம் சுமார் ஆயிரத்து 160 கோடி ரூபாய் கிடைக்கும் என தமிழக அரசு எதிர்பார்த்துள்ளது. இந்நிலையில், சொத்து வரி தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித் துள்ளது. அதில், சொத்து வரி சீராய்வு 2018-19 ஆம் ஆண்டின் முதலாம் அரையாண்டு முதலே நடைமுறைக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், புதிய வரிவிகிதத்தின் படி, முன் தேதியிட்டு வரி செலுத்த தேவையில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடகை குடியிருப்புகளுக்கு விதிக்கப்பட்ட 100 விழுக்காடு வரியை 50 விழுக்காடாக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வரிவிகிதம் உரிமையாளர் குடியிருப்பு மற்றும் வாடகைதாரர் குடியிருப்பு ஆகிய இரண்டுக்கும் ஒரே விகிதத்தில் இருக்கும் எனவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: