தீக்கதிர்

லஞ்சப்புகார்: வேளாண் இணை இயக்குநரின் வீடுகளில் சோதனை…!

விழுப்புரம்;
லஞ்சப் புகாருக்குள்ளான வேளாண்மைத்துறை துணை இயக்குநர் சங்கரின் வீட்டிலும் பண்ணை வீட்டிலும் வியாழனன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
நடத்தினர். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மைத் துறை இயக்குநர் அலுவலகத்தில் திங்களன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையிட்டனர். இதில், துணை இயக்குநர் சங்கரின் அறையில் கணக்கில் வராத சுமார் 4 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர்.

இதனைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ராஜா நகரில் உள்ள சங்கரின் வீட்டிலும் நல்லாத்தூரில் உள்ள பண்ணை வீட்டிலும் வியாழனன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். விழுப்புரத்தில் இருந்து வந்த 11 அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து இந்த சோதனையை மேற்கொண்டனர்.