ஈரோடு,
ஈரோடு நகரில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் கனரகவாகனங்கள் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் அனைத்தும் ஜூலை 27 ஆம் தேதி இரவிலிருந்து மாற்றுப் பாதையில் செல்லுமாறு ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ஈரோட்டில் இருந்து பெருந்துறை திருப்பூர் மற்றும் கோவை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் தனியார், அரசுபேருந்துகள் சக்தி சாலை வழியாககனி ராவுத்தர் குளம், சித்தோடு வில்லரசம்பட்டி வழியாக செல்லவேண்டும். கோவை, திருப்பூர் மற்றும் பெருந்துறை வழியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் மற்றும் தனியார், அரசு பேருந்துகள் வேளாளர் மகளிர் கல்லூரி ஒட்டிய சாலையில் காரை மாருதி நகர் வில்லரசம்பட்டி, நால்ரோடு வழியாக சென்று கனி ராவுத்தர் குளம், சத்தி சாலை வழியாக பேருந்து நிலையம் செல்ல வேண்டும். வீரப்பம்பாளையம் பிரிவு வழியாகவும் சென்று நசியனூர் சாலையை அடைந்து இடது பக்கம் திரும்பி வில்லரசம்பட்டி நால்ரோடு, கனி ராவுத்தர் குளம், சக்தி சாலை வழியாக பேருந்து நிலையத்தை அடையலாம். இலகுரக வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக வந்து இடது புறம் திரும்பி சம்பத் நகர் வழியாக சென்று நசியனூர் சாலை அரசு மருத்துவமனை ரவுண்டானா, மேட்டூர் சாலை வந்து பேருந்து நிலையம் அடையலாம். இரண்டு மூன்று சக்கர வாகனங்கள் அவசர ஊர்தி மற்றும் கார் போன்ற சிறிய வாகனங்கள் மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக ஈரோடு அரசு மருத்துவமனையில் இருந்து ஈரோடு பேருந்து நிலையம் பன்னீர்செல்வம் பூங்கா, மற்றும் ரயில் நிலையம் செல்லலாம்.

அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கோவை, திருப்பூர் செல்லும் பயணிகள் ஈரோடு பேருந்து நிலையத்திற்கு நகர்ப்புற பேருந்தில் வந்து பேருந்து நிலையத்தில் ஏறிக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நகரப் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்சியர் அலுவலகம் திண்டல் பெருந்துறை செல்லும் நகரப் பேருந்துகள் பேருந்து நிலையத்திலிருந்து பழனி வீதி, பிரப் ரோடு பன்னீர்செல்வம் பூங்கா, காளைமாடு சிலை, ரயில் நிலையம் இவிஎன் ரோடு வழியாக சென்று முத்துக்கருப்பன் வீதி, ப்ளூ டார்ட் வழியாக பெருந்துறை ரோடு சென்றடையலாம். பழனி, தாராபுரம், காங்கேயம் மற்றும் திருச்சி, மதுரை, கரூர், மூலனூர் வழியாக வரும் வாகனங்கள் ஈரோடு காளைமாடு சிலை ரயில் நிலையம், இவிஎன் ரோட்டை அடைந்து பெரியார்நகர் மேற்கு வளைவு வழியாக திரும்பி பயணிகளை இறக்கி மற்றும் ஏற்றிக்கொண்டு பெரியார் நகர் கிழக்கு வாயில் வழியாக காந்திஜி ரோட்டை அடைந்து தீயணைப்பு நிலையம், காளைமாடு சிலை, வழியாக பழனி, தாராபுரம், காங்கேயம் மற்றும் திருச்சி, மதுரை, கரூர், கடலூர் வழியாக செல்லலாம். பேருந்துகள் எக்காரணம் கொண்டும் பேருந்து நிலையம் வரக்கூடாது.

மேலும் இந்த வழியாக வரும் வாகனங்கள் அதிகப்படியாக நேரம் நிற்க வேண்டும் என்றால் 46 புதூர் பேருந்து நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். நகரப் பேருந்துகள் பெரியார் நகர் வளைவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு காந்திஜி ரோட்டை அடைந்து பன்னீர்செல்வம் பூங்கா, கனி மார்க்கெட் வழியாக பேருந்து நிலையம் செல்லலாம். கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் போன்றவை மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு, பிரப் ரோடு, ஜிஎச் ரோடு வழிகளில் இருந்து ஜிஎச் ரவுண்டானாவிற்கு கொண்டு செல்லக் கூடாது. மேலும், பாதையில் பள்ளிகள்,குடியிருப்புகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாகவும் செல்ல வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: