மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 48 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி நதியில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாகக் குறைந்துள்ளது. ஒகேனக்கல்லில் அருவியில் குளிக்கவும் ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. மேட்டூர் அணை முழுவதும் நிரம்பியுள்ள நிலை
யில், வினாடிக்கு 46 ஆயிரத்து 462 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 29 ஆயிரம் கன அடி வீதமும் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 38 ஆயிரம் கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், திருச்சியில் ஆற்றங்கரையில் உள்ள சலவைத் தொழிலாளர்களின் வீடுகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. மணல் கொள்ளையால், 4 நாட்கள் தாமதமாக தங்கள் பகுதிக்கு நீர் வந்ததாக கும்பகோணம் மக்கள் கூறியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: