சென்னை,
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே உண்ணாநிலைப் போராட்டம் வியாழனன்று (ஜூலை 26) நடைபெற்றது.

மாநிலத் தலைவர் ம.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற போராட் டத்தை அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பணியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் மு.கேசவன், மாநிலச் செயலாளர் எம்.சங்கர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் மு.அன்பரசு போராட்டத்தை நிறைவு செய்து உரையாற்றினார். போராட்டத்தை வாழ்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் பேசினார். முன்னதாக மாநில துணைப் பொதுச் செயலாளர் வீ.தனபால் வரவேற்றார். பொருளாளர் ஆ.கிருஷ்ணன் நன்றி கூறினார்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மாநிலம் முழுவதும் பல்நோக்கு மருத்துவமனைகளில் சுமார் 5,300க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறோம். 5 ஆண்டுகள் பணி செய்து முடித்திருந்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என 20.12.2012ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அரசாணை 325இல் உள்ளது. ஆனால் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணி முடித்தும் இன்னும் எங் களை பணி நிரந்தரம் செய்யவில்லை.மேலும் ஒரே பணியை மேற் கொள்ளும் பணியாளர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படுவதில்லை. அந்தந்த மாவட்ட ஆட்சியர் நிர்ணயிக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது. உதாரணமாக நாள் ஒன்றுக்கு 220 ரூபாய் முதல் 270 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. அதுவும் விடுமுறை எடுத்தால் ஊதியம் கிடையாது. பொங்கல் போனசாக வெறும் 1000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே அரசாணை 325இல் உள்ளபடி உடனடியாக எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லை யென்றால் தொடர்ச்சியான போராட்டங்
களை முன்னெடுப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Leave A Reply

%d bloggers like this: