கோவில்பட்டி;
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் 7-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், தீப்பெட்டி ஆலைகள் வெள்ளியன்று முதல் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தத்தால் கோவில்பட்டி, எட்டயபுரம், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட தென்மாவட்டப் பகுதிகளில் இயங்கிவரும் தீப்பெட்டி ஆலைகளில் சுமார் 21 லட்சம் தீப்பெட்டிப் பண்டல்கள் தேக்கமடைந்துள்ளதாகவும் இவை வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு அனுப்புவதற்காகத் தயாரிக்கப்பட்டவை. இதன் மதிப்பு சுமார் 400 கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளது.

லாரி போக்குவரத்து தடை பட்டுள்ளதால் தீப்பெட்டி தயாரிப்ப தற்குத் தேவையான குளோரைடு, சல்ஃபர், பாஸ்பரஸ் உள்ளிட்ட வேதிப் பொருட்கள் புதுச்சேரி, குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து கொண்டு வர முடியாத நிலைமை உள்ளது. எனவே, கோவில்பட்டி வட்டாரத்தைச் சேர்ந்த தீப்பெட்டி ஆலைகளை மூடுவதாக, அதன் உரிமையாளர்கள் தெரி வித்துள்ளனர்.

மூலப்பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் ஏற்கனவே உற்பத்தி செய்த தீப்பெட்டிகள் தேக்கம் போன்றவற்றால் குடோன்களிலும் லாரி செட்களிலும் தீப்பெட்டிப் பண்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழகம் முழுவதுமுள்ள தீப்பெட்டித் தொழிற் சாலைகள் மற்றும் சிறிய தீப்பெட்டி ஆலைகள் நாளை முதல் கதவடைப்பு செய்வதென உரிமை யாளர்கள் தரப்பில் முடிவு செய்யப் பட்டுள்ளது என்று சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.