சென்னை;
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் ஜூலை 29 ஆம் தேதியன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணைய வழக்கறிஞர்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆய்வின்போது தங்களையும் அனுமதிக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சார்பில் கடந்த 20 ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தீபாவின் மனு மீது ஆணையம் வியாழனன்று விசாரணை மேற்கொண்டபோது, அப்பல்லோ மற்றும் சசிகலா தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். விசாரணைக்கு முழுவதும் தொடர்பில்லாத மூன்றாவது நபரை ஆய்வில் சேர்க்க முடியாது என சசிகலா மற்றும் அப்பல்லோ தரப்பில் கூறப்பட்டது. இந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: