திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 4 பேரை துப்பாக்கி முனையில் ஆந்திர காவல்துறையினர் கைது செய்தனர்.
ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் ரோந்து சென்ற காவல்துறையினர், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஜவ்வாது மலையைச் சேர்ந்த சிவக்குமார், ஏழுமலை, மாணிக்கம் மற்றும் அவரது மகன் சேகர் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 13 லட்ச ரூபாய் மதிப்பிலான 21 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: