சென்னை:                                                                                                                                                                                 சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய வழக்கில் கைதான 17 பேரையும் ஐந்து நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை மகளிர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
ஜூலை 31 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அடுத்து கைதான 17 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே 17 பேரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வியாழனன்று மனுவை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்றம், மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 17 பேரையும் ஜூலை 26 முதல் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தது. 17 பேரிடமும் தனித்தனியாக ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: