மதுரை:
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 55, 56-ஆவது வார்டு பகுதிகளான தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், பாபுநகர், கணேஷ் நகர் பகுதி களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க வலியுறுத்தி மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதிக்குழு செயலாளர் ஜெ.லெனின் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் வியாழனன்று முற்றுகை யிட்டனர்.

இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப் பினர் ஏ.ரமேஷ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் மா. செல்லம் ஆகியோர் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், எங்கள் பகுதி மாநகராட்சி வார்டாக மாறி பத்து ஆண்டு கள் ஆகிவிட்டது.
வீட்டு வரி, குழாய்வரி, பாதாளச் சாக்கடை வரி, குப்பை வரி என அனைத்து வரிகளையும் மாநகராட்சி வசூலிக்கிறது. ஆனால் எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து
கொடுப்பதில்லை. குடிநீர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது.

லாரிகள் மூலம் விநியோகம் செய்யும் குடிநீர் குடிப்பதற்கு ஏற்ற தாக இல்லை.
எனவே எங்கள் பகுதி களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என்றனர்.
தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க 15 நாள் அவகாசம் வேண்டும் மதுரை மாநகராட்சி 100-வது வார்டு 6, 7,10,11 தெருக்கள் மற்றும் பழங் காநத்தம் தெற்குத் தெரு, நேதாஜிநகர், மைனர் தோப்பு பகுதிகளில் குழாய்களில் மாதக்கணக்காக தண்ணீர் வரவில்லை. பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

இதையடுத்து தன்னெழுச்சியாகத் திரண்ட மக்கள் புதனன்று தெற்கு மண்டல அலுலகத்தில் ஆணையாளரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்த னர். 15 நாட்களில் குடிநீர் விநியோகத்தை சரிசெய்வதாக அவர் உறுதியளித்த தைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பழங்காநத்தம் பகுதிக்குழு செயலாளர் கா.
இளங்கோவன், பெர்னாட் உட்பட 50-க்கும் மேற்பட் டோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: