இஸ்லாமாபாத் :                                                                                                                                                                         இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானத்திற்கும் எதிரான பயங்கரவாத தாக்குதலை நடத்துவதற்காக அல் பத்ர் எனும் புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு உருவாக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ முழு உதவி செய்திருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய பயங்கரவாத அமைப்பில் காஷ்மீரிலிருந்து 15 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஸ் இ முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகள், அல் பத்ர் அமைப்பிற்கு உதவுவதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பின் களமாக காஷ்மீர் குறிவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.