ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கல்லூரி மாணவியை அவரது வீட்டிலேயே வைத்து, ஒரு கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் பாஜக பிரமுகரின் மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் போபல் கர்த் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், வகுப்பு முடிந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது காரில் வந்த 2 பேர் அந்த மாணவியை- ஆளில்லாமல் இருந்த அவரின் வீட்டுக்கே கொண்டு சென்று பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளனர். மொத்தம் 5 பேர் இந்த வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.

வல்லுறவு குற்றம் இழைத்தவர்களில் உள்ளூர் பாஜக பிரமுகரின் மகன்தான் முக்கியக் குற்றவாளி என்று கூறப்படும் நிலையில், மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராக, அப்பகுதி மக்கள் ஆவேச போராட்டத்தில் இறங்கினர். மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைப்பெறுவதால், பாஜக பிரமுகரின் மகன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு போலீசார் தயங்குகின்றனர் என்று குற்றம் சாட்டும் பொதுமக்கள், மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இதையடுத்து, 5 குற்றவாளிகளில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 4 பேரை தேடி வருவதாக கூறியுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: