புதுதில்லி:
இந்திய பொதுத்துறை வங்கிகளின் வராக் கடன், 2017-18 நிதியாண்டில் மட்டும் 14.6 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்திய வங்கிகளின் வராக் கடன் தொடர்பான விவரங்களை மத்திய நிதித் துறை இணையமைச்சரான ஷிவ் பிரதாப் சுக்லா மாநிலங்களவையில் வெளியிட்டுள்ளார். அதில்தான் பொதுத்துறை வங்கிகளின் வராக் கடன் 14.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.                                                                 ஷிவ் பிரதாப் சுக்லா

இதன்படி, அதிகபட்ச வராக்கடன்களைக் கொண்ட வங்கியாக ஐடிபிஐ வங்கி உள்ளது. இந்த வங்கி வழங்கிய கடன்களில் சுமார் 28 சதவிகிதம் வராக் கடனாக மாற்றப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 25.3 சதவிகிதம், யூசிஒ வங்கி 24.6 சதவிகிதம், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா 24.1 சதவிகிதம், தேனா வங்கி 22 சதவிகிதம், செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 21.5 சதவிகிதம், பேங்க் ஆப் மகாராஷ்டிரா 19.5 சதவிகிதம், பஞ்சாப் நேநனல் வங்கி 18.4 சதவிகிதம் என்ற அளவில் வராக் கடன்களைக் கொண்டிருக்கின்றன.இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழங்கிய கடன்களில் 10.9 சதவிகிதம் வராக் கடனாக மாற்றப்பட்டுள்ளது.

அதேநேரம், விஜயா பேங்க் (6.3 சதவிகிதம்) மற்றும் இந்தியன் பேங்க் (7.4 சதவிகிதம்) ஆகிய இரு வங்கிகள் மட்டுமே சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளன. மேலும், 2017-18 நிதியாண்டில் விஜயா வங்கி ரூ. 727 கோடியும், இந்தியன் வங்கி ரூ. ஆயிரத்து 259 கோடியும் வருவாய் ஈட்டியுள்ளன. இதர வங்கிகள் பெரும் வருவாய் இழப்பையே சந்தித்துள்ளன. நீரவ் மோடியால் மோசடிக்கு உள்ளான பஞ்சாப் நேசனல் வங்கி அதிகபட்சமாக ரூ. 12 ஆயிரத்து 283 கோடி வருவாய் இழப்புக்கு உள்ளாகியுள்ளது. நீரவ் மோடியின் நிதி மோசடியில் ரூ. 13 ஆயிரத்து 700 கோடியையும் இழந்துள்ளது. ஐடிபிஐ வங்கி ரூ. 8 ஆயிரத்து 238 கோடி வருவாய் இழப்பையும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ரூ. 6 ஆயிரத்து 547 கோடியும் வருவாய் இழப்பையும் சந்தித்துள்ளன.

Leave A Reply

%d bloggers like this: