ஈரோடு,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஈரோடு மாவட்ட பிரிவின் சார்பில், மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் வரும் ஜூலை 29 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆர்.நோயலின்ஜான் தெரிவித்தாவது, ஈரோடு மாவட்டம், வ.உ.சி. பூங்கா விளையாட்டரங்கில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் பின் வரும் பிரிவுகளில் ஜூலை 29 ஆம் தேதி காலை 8 மணி முதல் நடைபெறவுள்ளது. தடகளம்: மாணவர்களுக்கு 100மீ, 200மீ, 400மீ, 1500மீ, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல். மாணவிர்களுக்கு 100மீ, 200மீ, 400மீ, 800மீ, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல். கோ-கோ மாணவ, மாணவிகள், கையுந்துபந்து- மாணவ, மாணவிகள். நீச்சல்: 50 மீ, 100 மீ, 200 மீ, 400 மீ பட்டர் ஸ்டைல், 50மீ பேக் ஸ்டிரோக், 50 மீ பிரஸ்ட் ஸ்டிரோக், 50 மீ பட்டர்பிளை, 200மீ ஐ.எம். (மாணவ, மாணவிகள்). மேற்கண்ட விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் கலந்து கொள்ளலாம். விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுபவர்களுக்கு பயணப்படி மற்றும் தினப்படி வழங்கப்பட மாட்டாது. சொந்த செலவில் கலந்து கொள்ள வேண்டும். தடகளம் மற்றும் நீச்சல் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் ஒரு நபர் 2 போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும். மேலும் தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் நாளான ஜூலை 29 ஆம் தேதி காலை 8 மணிக்குள் தங்கள் பெயரினை பதிவு செய்து கொள்ள வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் குழு, தடகளம் மற்றும் நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியரிடம் தகுதிச் சான்றிதழ் பெற்று கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.