போபால்,

மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தின் போது கட்டிலில் கர்பிணியை கொண்டு சென்ற அவலம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மத்தியப்பிரதேசம் மாநிலம் திகம்கரில் பெய்த கனமழையில் அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அதே பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்துள்ளார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராத நிலையில், பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் படுக்க வைத்து குடும்ப  உறுப்பினர்களே அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.

இதே பகுதியில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது தற்போது வெளிவந்திருக்கிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஒரு நபர் தனது தாயின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக கொண்டு செல்ல எந்த வித வசதியும் இல்லாத நிலையில், தனது  மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றார்.

இதே போல் குன்வர் பாய் என்ற பெண் பாம்பு கடித்து இறந்த நிலையில் அவரது உடலை உடற்கூறு பரிசோதனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். கடைசி வரை ஆம்புலன்ஸ் வராத நிலையில்  இறந்த குன்வார் பாய்வின் மகனும் அவரது உறவினர்களும் அவரது உடலை ஒரு மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த வீடியோக்கள் எல்லாம் சமூக ஊடகங்களில் வெளிவந்தது வைரலானது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

%d bloggers like this: