புதுதில்லி:
14-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடர் வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) செவ்வாயன்று வெளியிட்டது.அட்டவணையில் இந்திய அணிக்கு மட்டும் இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்த நாளில் போட்டி உள்ளது.செப்டம்பர் 18-ம் தேதி தகுதி சுற்று அணியோடு விளையாடும் இந்திய அணி, மறுநாள் பாகிஸ்தான் அணியுடன் மோதுவது போல அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
அட்டவணையை கண்டு அதிர்ச்சி அடைந்த இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ),சர்வதேச கிரிக்கெட் வாரியதின் புத்திகூர்மை இல்லாத செயலுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் ஓய்வு கொடுத்துவிட்டு, இந்தியாவிற்கு ஓய்வு கொடுக்காமல் மறுநாளே விளையாட வைப்பது என்ன நியாயம்? என கேள்வி எழுப்பி அட்டவணையில் தேதியை உடனடியாக மாற்ற வேண்டும் என பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளது

Leave a Reply

You must be logged in to post a comment.