வாஷிங்டன்:
சமீபத்தில் ஹெல்சிங்கி நகரில் நடந்த சந்திப்பின் போது டொனால்டு டிரம்ப்க்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கால்பந்து ஒன்றினை பரிசாக அளித்தார். அந்த கால்பந்தில் டிரம்ப்பை வேவு பார்ப்பதற்காக மைக்ரோ சிப் ஒன்றை புடின் வைத்துவிட்டார் என்று அமெரிக்காவில் ஒரு செய்தி பரப்பப்பட்டிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதிக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு பரிசுப் பொருளும் முழுமையான சோதனைக்குப் பிறகே எடுத்துச் செல்லப்படுகிறது. ஆனாலும் புடின் அளித்த கால்பந்தை வெள்ளை மாளிகைக்குள் கொண்டு செல்ல வேண்டாம் என அமெரிக்க செனட் உறுப்பினர் ஒருவர் கூறியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.