சண்டிகர்: அரியானா மாநிலத்தின் வீராங்கனையை இரண்டரை  ஆண்டுகளாக பயிற்சியாளர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரிவாரி மாவட்டத்தை சார்ந்த பெண் கைப்பந்து விளையாட்டில் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். அப்பெண்ணுக்கு பயிற்சியளித்த பயிற்சியாளர் குருகுரம், ரோஹ்தக் ஆகிய இடங்களில் வைத்து பலமுறை அவரை பலாத்காரம் செய்துள்ளார். இச்சம்பவத்தை வெளியில் கூறினால் பயங்கரமான விளைவுகள் சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளார். அப்பெண் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின் கீழ் பயிற்சியாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பயிற்சியாளர் மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த சம்பவம் விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: