நாமக்கல்,
விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக்கோரி திருச்செங்கோட்டில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தொடர்
முழக்க போராட்டம் நடைபெற்றது.

ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்குவதுடன், நிலுவை கூலியை உடனடியாக வழங்கிட வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலை கடைகளில் முழுமையாக பொருட்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதனன்று திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சம்பூரணம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி பெருமாள் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட தலைவர் சி.துரைசாமி, மாவட்ட செயலாளர் வீ.பி.சபாபதி, எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் எஸ்.சி.சக்திவேல், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் கே பூபதி, வி.தொ.ச.சங்க மாவட்டதுணை தலைவர் வீ.சதாசிவம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்கள். முடிவில் மூர்த்தி நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.