சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF) காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப் பணியிடங்கள் : 697

கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10 வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ பிட்டர், எலக்ட்ரிசியன், வயர்மேன், வெல்டர், ஏசி மெக்கானிக், ரேடியோ ஆப்ரேட்டர் போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியினை நிறைவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு
விண்ணப்பக் கட்டணம் : பொது, ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.100. எஸ்.சி/எஸ்.டி பிரிவினர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

கட்டணம் செலுத்தும் முறை: Account Name : FA&CAO/ICF, Account No : 05680210000328, Bank Name : UCO Bank/ICF Colony/Chennai, IFSC Code : UCBA0000568 என்ற வங்கிக் கணக்கில் ஆன்-லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://pbicf.gov.in/app_index.php என்ற வலைதள லிங்கில் சென்று ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.08.2018 (மாலை 5 மணிக்குள்)

Leave a Reply

You must be logged in to post a comment.