தீக்கதிர்

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து…!

உயர்மட்டத்தில் நடக்கும் ஊழல்களை விசாரிப்பதற்கான லோக்பால் அமைப்பை உடனடியாக அமைக்குமாறு 2017 ஏப்ரல் மாதமே உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும், மோடி அரசு இப்போது வரை எந்த முயற்சியும் எடுக்காமல் இழுத்தடித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கில் நேற்றைய தினம் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசுத்துறை மற்றும் அதிகார மையங்களின் ஊழலில் இருந்து சாமானிய மக்களை பாதுகாக்க வகை செய்யும் லோக்பால் அமைப்பை அமைப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம் என்று நீதிமன்றம் விலாசியுள்ளது.

பாஜகவினர் ஆட்சிக்கு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. லோக்பால் அமைப்போம் என்றார்கள். இன்னும் எந்த முயற்சியும் நடக்கவில்லை. நீரவ் மோடி, மெகுல் சோக்சி, ரபேல் பேர ஊழல்… வியாபம் பற்றி பேசவே வேண்டாம்… ஸ்ரீஜென் ஊழல், கூட்டுக்களவாணி முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி வராக்கடன் தள்ளுபடி, சட்டவிரோத சுரங்க ஊழல்கள்… இன்னும் எத்தனை எத்தனை… எல்லாமே நேராக அதிகார மையத்தின் உச்சத்தை நோக்கியே செல்கிறது. இவர்கள் எப்படி லோக்பாலை அமைப்பார்கள்?