போபால்:
பாலியல் வல்லுறவுக்கு உள்ளான 16 வயது சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி, 75 கி.மீ. தூரம் பயணம் செய்து, காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.பாதிக்கப்பட்ட சிறுமி, மத்தியப்பிரதேச மாநிலத் தலைநகரான போபாலில் வசித்து வருபவர். இவர், இரவு நேரத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். அப்போது சந்தன் சிங் அலியாஸ் சுகே, சோனாபால் சிங், தர்மேந்திரா சிங் மற்றும் ஜான்வீர் சிங் ஆகியோர், சிறுமியைக் கடத்தி அருகிலிருந்த வயல்வெளிக்கு தூக்கிச்சென்றுள்ளனர்.

அங்கு கட்டாயப்படுத்தி சிறுமியை கும்பலாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் அவரை அங்கேயே விட்டுவிட்டும் சென்றுள்ளனர். ஒருவழியாக தட்டுத்தடுமாறி அந்தச் சிறுமி வீடுவந்து சேர்ந்துள்ளார். நடந்த உண்மைகளை பெற்றோரிடமும் கூறியுள்ளார்.
இவ்விஷயத்தில் பாதிக்கப்பட்ட நபர்தான் புகார் அளிக்க வேண்டும்; அதைக் காவல் நிலையத்தில் உள்ள பெண் காவலர்தான் பதிவு செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால், சிறுமி வசித்து வரும் நாகரா பகுதி காவல் நிலையத்தில் எந்த பெண் காவலரும் இல்லை. மேலும் அங்கிருக்கும் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர்களும் இல்லை.

இதனால், சிறுமி சுமார் 75 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மோரினா நகர மாவட்ட மருத்துவமனைக்கு சென்று புகார் அளித்துள்ளார்.தற்போது 4 குற்றவாளிகளையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: