புதுதில்லி; 
இன்றைய தினம் வங்கிகள் நெருக்கடிக்குள் சிக்கித் தவித்துக் கொண்டி ருக்கின்றன என்று மாநிலங்களவையில் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஹரிவன்ஷ் கூறினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அவசரப் பொதுமுக்கியத்துவம் வாய்ந்தபிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் ஹரிவன்ஷ் பேசிய தாவது:
“வங்கிகள் நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கின்றன. இது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதித்துக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் 11 வங்கிகளின்
நிதி நிலைமைகள் மிகவும் மோசமாக இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. வெளிநாட்டில் இயங்கி வந்த இந்திய வங்கிகளின்
கிளைகளில் சுமார் 70 மூடப்பட்டுவிட்டன. வங்கிகளின் வராக்கடன்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதால், மூத்த வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு? வங்கி களின் செயல்படா சொத்துக்கள் குறித்து நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தின்மீது பதிலளிக்கையில் பிரதமர் தெரிவித்திருக்கிறார். ஆனால் அது ஊடகங்களில் வெளிவரவில்லை. இந்தியப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிப்பதற்குக் காரணமாக செயல்படா சொத்துக் கள் அதிகரித்திருப்பதற்கு யார் காரணம் என்பதை விசாரணை செய்திட அரசாங்கம் முன்வர வேண்டும்.இவ்வாறு ஹரிவன்ஷ் கோரினார். (ந.நி.

Leave a Reply

You must be logged in to post a comment.