புதுதில்லி :

இந்த ஆண்டு நீட் எழுதிய 2 லட்சம் மாணவர்களின் தரவுகள் வெளியே கசிந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். ஆனால், அதை சி.பி.எஸ்.இ மறுத்துள்ளது.

மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வான நீட் தேர்வை எழுதிய 2 லட்சம் மாணவர்களின் தனிப்பட்ட விபரங்கள், அலைபேசி எண்கள் மற்றும் இ-மெயில் முகவரிகள் ஆகியவை வெளியாகுவதாக சர்ச்சைகள் கிளம்பின. அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மாணவர்களின் தகவல்கள் கசிவதாக கடிதம் ஒன்றை சி.பி.எஸ்.இ நிர்வாகத்திற்கு எழுதியிருந்தார். இதனையடுத்து, சி.பி.எஸ்.சி நிர்வாகம் மாணவர்களின் தகவல்கள் வெளியாக எந்த வாய்ப்பும் இல்லை எனக்கூறி குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: