மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் BSF, CISF, CRPF, SSB, ITBP, AR, NIA, SSF ஆகிய துணை இராணுவப் படைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் SSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மொத்த பணியிடங்கள் : 54,953
கல்வித்தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தின் வாயிலாக பத்தாம்
வகுப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 21,700 – 69,100

வயது வரம்பு : 01.08.2018 அன்று குறைந்தபட்சம் 18வயது நிறைவடைந்தவராகவும் 23 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, மருத்துவத் தேர்வு.

உடல் தகுதி : (பொது, ஓ.பி.சி பிரிவு) ஆண்கள் குறைந்தபட்சம் 170 செ.மீ உயரமும் பெண்கள் 157 செ.மீ உயரமும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ஆண்கள் 162.5 செ.மீ உயரமும் பெண்கள் 150 செ.மீ உயரமும் இருத்தல் வேண்டும்.

தேர்வு மையங்கள் : தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி.

விண்ணப்பக் கட்டணம் : பொது, ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.100. எஸ்.சி/எஸ்.டி பிரிவினர், பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : www.ssconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.08.2018 / மேலும் விரிவான விவரங்களுக்கு www.ssc.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். இதுகுறித்த சந்தேகங்களுக்கு தேர்வாணையத்தின் தெற்கு தலைமையகத்தின் 09445195946, 044 28251139 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Leave A Reply

%d bloggers like this: