சென்னை
கருணாநிதி நலம்
தி.மு.க தலைவர் கருணாநிதி செவ்வாய் இரவு உடல் நலம் பாதிக்
கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலை யில், இதுதொடர்பாகச் சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க செயல் தலைவர் மு.க.
ஸ்டாலின், `கருணாநிதிக்கு சிகிச்சைக்குப் பிறகு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்
ளது. அச்சப்படும் வகையில் ஏதுமில்லை’ என்று தெரிவித்தார்.

புதுதில்லி
குறையும் எச்.ஐ.வி பாதிப்பு!
இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. எச்.ஐ.வி நோயால் பாதிக்கப் பட்ட மக்களின் எண்ணிக்கை 2010-2017-ல் 1.2 லட்சத்தில் இருந்து 88,000 ஆக குறைந்துள்ளது. எச்.ஐ.வி-யால் உயிரிழப்ப வர்களின் எண்ணிக்கை 23 லட்சத்திலிருந்து 21 லட்சமாக குறைந்துள்ளது.

லக்னோ
தொடரும் கும்பல் வன்முறை
ராஜஸ்தானின், ஆல்வாரில் பசுக் குண்டர்களால் ரக்பர்கான் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, உத்தரப்பிரதேச மாநிலத்தில், எருமை மாடுகளுக்கு விஷம்
வைத்து கொலை செய்து கடத்தியதாக கூறிநான்கு வாலிபர்களை கொடூரமாகத் தாக்கி யுள்ளனர் சங்பரிவார பசுக்குண்டர்கள். பொது மக்கள் என்ற பெயரில் கும்பல் சேர்ந்து
குண்டர்கள் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை
தயங்கும் நிர்வாகிகள்
விஜயகாந்த் கட்சி தொடங்கியதிலிருந்து, பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்து வந்தார். அன்றைய நாளில் ‘வறுமை ஒழிப்பு நாளாகப் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். அதே போன்று இந்த ஆண்டும் சிறப்பாகக் கொண்டாட அக்கட்சி சார்பில் முடி வெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், செலவு செய்ய நிர்வாகிகள் தயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்லாமாபாத்
குவெட்டாவில் பயங்கரம்
பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடை பெற்று வருகிறது. சிந்து, பலுச்சிஸ்தான், பஞ்சாப், கைபர் ஆகிய 4 மாகாணங்களுக்கும் புதனன்று வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வந்தனர். இந்நிலையில், குவெட்டா நகரில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் பலியான துயரம் நடந்துள்ளது.

அகமதாபாத்
ஹர்திக்- 2 ஆண்டு சிறை
படேல் சமூகத்தின் ஹர்திக் படேலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது குஜராத் நீதிமன்றம். படேல் சமூகத்திற்கு உரிய சலுகைகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என கடந்த 2015-ல் போராட்டம் நடத்தினர்.அதில், பா.ஜ.க உறுப்பினர் ருஷிகேஷின் அலுவலகம் தாக்கப்பட்டது. இதற்காக, ஹர்திக் படேலுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை
துபாய் ரயில் திட்டம்?
‘ஓடும் ரயில்களில் மக்கள் படிகளில் பயணிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சென்னையில் 4 இளைஞர் பலியான விபத்திற்கு காரணமான தடுப்பு சுவர் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துபாய் ரயிலில் மூடும் கதவுகள் வைக்கப்
பட்டுள்ளது. அந்தத் திட்டம் சரியாக இருந்தால் அதை இங்கும் செயல்படுத்து வோம்’ என ஆய்வுக்குப்பின் ரயில்வே பாதுகாப்பு குழு ஆணையர் மனோகரன் கூறினார்.

திருநெல்வேலி
ரயிலில் டிவிக்கள் திருட்டு
தில்லியில் இருந்து குமரிக்கு இயக்கப்படும் திருக்குறள் எக்ஸ்பிரஸில் கொண்டுவரப்பட்ட பார்சலை உடைத்து 12 டிவி பெட்டிகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தினர். இதனால் திருக்குறள் எக்ஸ்பிரஸ் நெல்லை ரயில் நிலையத்தில் சுமார் 2 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

சென்னை
பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது
அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பி.இ படிப்பில் சேர்க்கைப்பெற, பொதுப் பிரிவின ருக்கான ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வு புதனன்று தொடங்கியது. 200-க்கு 190 வரை கட்-ஆப் மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்களுக்கு, வரும் 27-ம் தேதி மாலை வரை ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

குற்றாலம்
தாராளமாய் தண்ணீர்!
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் நிலையில் சுற்று லாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. நீண்ட வரிசையில் காத்திருந்து குளிக் கின்றனர். குற்றாலத்தில் சீசன் தொடர்ந்து சிறப்பாகஇருப்பதால், அருவிகளுக்கு அருகில் தற்காலிகக் கடைகளை அமைத்துள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெங்களூரு
குமாரசாமி புதுத்தடை
பத்திரிகையாளர்கள் யாரும் விதான் சௌதாக்குள் (கர்நாடக சட்டமன்றம்) நுழையக்கூடாது என கர்நாடக முதல்வர் குமாரசாமி வாய்மொழி உத்தரவு பிறப்
பித்துள்ளார். பத்திரிகை யாளர்கள் பலர் அடிக்கடி சட்டமன்றத்தில் உள்ள அமைச்சர்கள், அதிகாரி களைக்காண வருவதால் அவர்களின் வேலை தடைபடுவதாகக் கூறி இந்த உத்த
ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.