தானே :
நேற்று இரவு மகாராஷ்ட்ரா மாநிலம் தானே மாவட்டத்தில் ராசூலபாக் ஹடிபார் என்ற பகுதியில் மூன்றடுக்கு குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் நடைபெறவில்லை என கூறப்பட்டுள்ளது. இடிபாடுகளில் இருந்து பலர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. அதிக மீட்பு படையைச் சேர்ந்தவர்களும், தீயணைப்பு மற்றும் காவல்துறை சேர்ந்த அதிகாரிகளும் சம்பவ இடத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.