தஞ்சாவூர்:
தமிழ்ப் பல்கலைக்கழகமும், அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப் பேரவையும் இணைந்து நடத்தும் “தமிழ்ச் சங்கமம்” (இந்தியத் தமிழ்ச் சங்கங்களின் மாநாடு) ஜூலை 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் இந்தியாவிலுள்ள 50 தமிழ்ச் சங்கங்கள் கலந்துகொள்கின்றன. இதனையொட்டி இந்தியாவிலுள்ள 25 மாநிலத்தில் இருந்து வருகை தரும் தமிழ் சங்கப் பிரதிநிதிகள் அந்தந்த மாநிலத்தின் மண்ணைக் கொண்டு வரவுள்ளனர்.

அம்மண்ணைக் கொண்டு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 25 மரக்கன்றுகளை நடவும், மண்ணை 25 மாநிலமும் அளிக்கிறது. 25 மாநில மண்ணையும் ஒரு குழியில் இட்டு ஒரு ஆலமரக்கன்றை நட்டு அம்மரம் “தேசிய மரம்” என்று பெயரிடப்படும். இம்மாநாட்டில்
இந்திய வரலாற்றைக் குறிப்பிடும் வகையில் ஒரு நூல் வெளியிடப்படுகிறது. இம்மாநாட்டின் வளாகத்தில் நூல் கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. “இந்தியா முழுமையும்
இருக்கின்ற இந்த தமிழ்ச் சங்கத்திற்குத் தமிழ்ப் பல்கலைக் கழக மாணவர்களை அனுப்பி ஆய்வு மேற்கொள்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் துணைவேந்தர்.

Leave A Reply

%d bloggers like this: