சேலம்,
தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்க சேலம் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறவேற்றப்பட்டன.

இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் மாவட்ட 22 ஆவது மாநாடு விபிசி சிந்தன் நினைவகத்தில் மாவட்ட தலைவர் முத்துகுமரன் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டை சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் சரவணன் துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஆர்.கவின்ராஜ் அறிக்கையை முன்வைத்து பேசினார். இம்மாநாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். யுஜிசியை கலைக்கக் கூடாது. கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அரசு பள்ளிகளை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் கட்டண கொள்ளை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு:
இம்மாநாட்டில் மாணவர் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவராக கே.பகத்சிங், செயலாளராக ஆர்.கவின்ராஜ் மற்றும் 15 பேர் கொண்ட மாவட்ட குழு உறுப்பினர்கள் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில், மாநில துணைத் தலைவர் எம்.கண்ணன் மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.