சென்னை,
தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூர்-செங் கோட்டை இடையே ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் செப்டம்பர் 25ஆம் தேதி வரை சிறப்பு கட்டண ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. சென்னை எழும்பூர்-செங் கோட்டை-சென்னை எழும்பூர் (எண்.06011/06012) சென் னையில் இருந்து திங்கட்கிழமைகளில் இரவு 8.40 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு செங் கோட்டை சென்றடையும். செங்கோட்டையில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் மாலை 4.30 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 5.35 மணிக்கு எழும்பூர் வந்தடையும். ஏசி முதல் வகுப்பு பெட்டி ஒன்று, இரண்டாம் வகுப்பு பெட்டி ஒன்று, ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டிகள் இரண்டு, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 8, இருக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்புபெட்டிகள் 3 மற்றும் 2 சரக்குப் பெட்டிகள் அடங்கிய இந்த ரயில் தாம்பரம், செங் கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, செட்டிநாடு, காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், பம்பா அச்சன் கோயில் சந்தை, கடையநல் லூர், தென்காசி வழியாக இந்த ரயில் செங்கோட்டை சென்றடையும். இதற்கான முன்பதிவுகள் புதனன்று (ஜூலை 25) தொடங்கியது.

Leave a Reply

You must be logged in to post a comment.