தீக்கதிர்

சட்டீஸ்கருக்கு 2 நாள் பயணம் மேற்கொள்ளும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்

ராய்பூர் :

சட்டீஸ்கர் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பாஸ்டர் மாவட்டத்தின் ஜக்தல்பூருக்கு சென்றார். அங்கு சட்டீஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங் குடியரசுத்தலைவரை வரவேற்றார்.

தண்டீவாடா மற்றும் பாஸ்டர் மாவட்டங்களில் நகஸல் பாதிப்புக்குள்ளான பகுதியை பார்வையிடுகிறார் மற்றும் பயணத்தின் இரண்டாவது நாளான நாளை அவர் அம்மாவட்டங்களில் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் ஜக்தல்பூரிலுள்ள பலிராம் கஸ்யாப் நினைவு மருத்துவமனை வளாகத்தில் ஒரு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை திறப்பு விழா செய்ய உள்ளார் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.