புதுதில்லி;
தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தில் (என்சிஆர்பி), முதன்முறையாக ‘கும்பல் கொலைக் குற்றங்கள்’ என்ற வகைப்படுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது. ‘பசு பாதுகாப்பு’ எனும் பெயரில் கும்பல்களால் அடித்துக் கொல்லப்படும் குற்றங்களின் பதிவு இதுவரை குற்ற ஆவண தொகுப்புகளில் இடம்பெறாமல் இருந்தது. ஐபிசி மற்றும் எஸ்எல்எல் என இரண்டு பிரிவுகளின் கீழும் அந்தக் குற்றங்கள் வராமல் இருந்ததே இதற்கு காரணமாக இருந்தது. இந்நிலையில், முதன்முறையாக, என்சிஆர்பி-யின் புள்ளி விவரங்களில் கும்பல் கொலை பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.