ஈரோடு
ஊதிய உயர்வு ஒப்பந்தப்படி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும் எனக்கோரி ஈரோட்டில் சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின்வாரிய நிரந்தர பணிகளில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை அமர்த்தக்கூடாது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பகுதி நேர பணியாளர்களை முழுநேர பணியாளர்களாக நியமிக்க வேண்டும். ஊதியம் இன்றி பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊதிய உயர்வுஒப்பந்தப்படி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.380 தினக்கூலி வழங்கிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) சார்பில் ஈரோடு மின்பகிர்மான வட்ட அலுவலகம் முன்பு திங்களன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைதலைவர் எம்.ஆர்.பெரியசாமி தலைமை வகித்தார். கிளைச்செயலாளர் ஜோதிமணி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், பெருந்துறை செயலாளர் பி.குமாரசாமி, கிளை துணை தலைவர் லோகுசாமி ஆகியோர் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.