சென்னை,
மாணவர்களுக்கு 60 சதவிகித மதிப்பெண் இருந்தால் மட்டுமே கல்விக்கடன் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி உள்ளது. இந்நிலையில் கல்விக்கடன் குறித்த வழக்கு விசாரணையின் போது எஸ்பிஐ வங்கியில்  இனி வரும் நாட்களில் மாணவர்கள் கல்விக்கடன் பெற 60 சதவிகித மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டு சேர்க்கையாக இருந்தால் கல்வி கடன் வழங்கப்படாது என்று எஸ்.பி.ஐ வங்கி தலைஞாயிறு கிளை மேலாளர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் மாணவரின் தந்தை பெயரில் எந்த கடனும் நிலுவையில் இருக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார். 

Leave A Reply

%d bloggers like this: