போபால்;
இந்து பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வந்த முஸ்லிம் இளைஞரை, நீதிமன்றத்தில் வைத்தே சங்-பரிவார அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர்.போபால் நகரைச் சேர்ந்த இளைஞர் ஷாகில். இஸ்லாமியரான இவர் நொய்டா நகரில் பணிபுரிந்து வருகிறார். இவரும் இவருடன் பணிபுரியும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்து பெண்ணான பிரீத்தி சிங்கும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
தங்களது திருமணத்தைப் பதிவு செய்வதற்காக அவர்கள் காசியாபாத் நகரில் உள்ள நீதிமன்றத்திற்கு செவ்வாய்க்கிழமையன்று சென்றுள்ளனர். இதையறிந்த கும்பல் ஒன்று, நீதிமன்றத்தில் வைத்தே ஷாகிலைச் சரமாரியாகத் தாக்கியுள்ளது. அப்போது, அங்கிருந்த காவல் துறையினர், ஷாகிலை மீட்டுக் காப்பாற்றியுள்ளனர்.

இதனிடையே, காதல் தம்பதி தங்கள் மீதான தாக்குதல் குறித்து புகார் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் மீண்டும் தாக்குவார்களோ என்ற அச்சத்தில் தயங்கியுள்ளனர். ஆனால், காவல் துறையினர் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து 2 பேரை தற்போது கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் பலரை தேடி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: