நாகர்கோவில்;
அய்யா வைகுண்டர் தலைமைப்பதியை அறநிலையத்துறை கைப்பற்றி பாரம்பரிய வழிபாட்டு முறைக்கு விரோதமாக செயல்படுவதைக் கண்டித்து நாகர்கோவிலில் புதனன்று நடந்த கருத்தரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது.இதுகுறித்து கருத்தரங்கத்தில் நிறை
வேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சமூக சமத்துவ சிந்தனையை பரப்பியதோடு, சமூகத்தின் அடித்தட்டு மக்களை ஒன்று
படுத்தி, சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக வும் ஆதிக்க சாதி மற்றும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பொருளாதார சுரண்ட லுக்கு எதிராகவும் போராடி மக்களை தலை
நிமிரச்செய்தவர் அய்யா வைகுண்டர் ஆவார். இவரது போராட்டத்தால் தென்தமிழகத்தில் மிகவும் இழி நிலையில் இருந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் ஓரளவு மனிதர்களாக தலை நிமிர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் வளர்ந்து வரும் சனாதன சக்திகள், மீண்டும் நவீன
வருணாசிரம முறையை நிலைநாட்ட முனைப்பு காட்டுகின்றனர். ஒற்றை கலாச்சா
ரத்தை முன்னிறுத்தி வழிபாட்டு முறைகள், திருமண சடங்குகள், முற்போக்கு கல்வி,
கிராம விளையாட்டுகள், கலைகள், வேலை வாய்ப்புகள் மொழிகள் அனைத்தையும் அழித்திட முனைகின்றனர்.இதன் ஒரு பகுதிதான் அய்யா வைகுண்டரின் வழிபாட்டு நெறிகளை மக்களிடமிருந்து பறிப்பதும், இம்மக்களை சனாதன முறைக்கு தள்ளி, நவீன அடிமை
களாக மாற்ற முயற்சிப்பதும் ஆகும்.

அய்யா வைகுண்டரின் தலைமைப் பதியான சாமிதோப்பு பதியை அறநிலையத்துறை மூலம் கைப்பற்றி, வழிபாட்டு முறையை ஆகம விதிமுறைகளுக்கு உட்படுத்த முயற்சிப்பதுமாகும்.
எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, அறநிலையத்துறையின் தலையீட்டை திரும்பப் பெற வேண்டும் என அரசையும், அறநிலையத்துறையையும் கேட்டுக் கொள்கிறோம்.
அய்யாவின் பாரம்பரியத்தை பாதுகாப்பதும், அதன் மீது வர்ணாசிரமத்தின் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் பாதுகாப்பதும், அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்ட வரலாறு தெரிந்த மக்களின் தலையாய கடமையும், பொறுப்புமாகும். இக்கடமை களை முன்னெடுக்கவும் இக்கூட்டத்தில் சபதமேற்போம்.

அறநிலையத்துறை உடனடியாக தலையீடுகளை விலக்கிட கோரி, தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது எனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது,கருத்தரங்கத்திற்கு அய்யா வைகுண்டர் பாரம்பரியம் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் என்.எஸ்.கண்ணன் தலைமை வகித்தார். என்.ரெஜீஸ் குமார் வரவேற்றார். பேராசிரியர் அருணன்,சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தா
ளர் பொன்னீலன், பூஜிதகுரு பாலபிரஜாபதி அடிகளார், எம்.டி.பெரியவன் உள்ளிட்டோர் பேசினர். என்.முருகேசன், பேராசிரியர் கே.கணேசன், என்.உஷா,ஞா.அரங்கசாமி, பேராசிரியர் டி.நாகராஜன்,எஸ்.விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.