ஈரோடு,
பிஎஸ்என்எல்-லில் 4ஜி ஸ்பெக்ட்ரமை உடனே வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய குழுவை அமைத்து உடனடியாக ஊதிய உயர்வை அமலாக்க வேண்டும். பிஎஸ்என்எல் நிர்வாகம் கோரிய படி பிஎஸ்என்எல் 4ஜி ஸ்பெக்ட்ரமை உடனே வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதிய மாற்றத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஜூலை 24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அறைகூவல் விடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் ஈரோட்டில் செவ்வாயன்று பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியது. இப்போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளை நிர்வாகி எஸ்.கண்ணுசாமி, என்எப்டிஇ நிர்வாகி எம்.சுப்பிரமணியன், எஸ்என்இஎ நிர்வாகி எம்.பழனியப்பன், எஐபிஎஸ்என்எல்இஎ நிர்வாகி என்.குமரவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில அமைப்புச் செயலர் வி.மணியன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாநிலத் துணைச்செயலாளர் என்.குப்புசாமி, மாவட்ட செயலாளர் எல்.பரமேஸ்வரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் திரளானோர்கள் பங்கேற்றனர்.

சேலம்
சேலம் மெய்யனூர் அலுவலகம் முன்பு நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தை பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட உதவிதலைவர் தமிழ்மணி துவக்கிவைத்தார். இதில் டிஎஸ்எஸ்என்இஏ மாவட்ட செயலாளர் ஆர்.மனோகரன், எஐபிஎஸ்என்எல்இஏ மாவட்ட செயலாளர் எம்.சண்முகசுந்தரம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விஜயன், மாவட்ட செயலாளர் இ.கோபால், பொருளாளர் தங்கராஜ், உதவி தலைவர் ஹரிகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவை
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடைபெற்ற போராட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் வி.சசிதரன் தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.பிரபாகரன் துவக்க உரையாற்றினார். என்எப்டிஇ அகில இந்திய பொருப்பாளர் எ.செம்மன் அமுதம், பிஎஸ்என்எல் ஊழியர்சங்க மாநில அமைப்பு செயலாளர் சக்திவேல், மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன், மாவட்ட தலைவர் முகம்மது ஜாபர், மாநில உதவி செயலாளர் என்.பி.ராஜேந்திரன், மாவட்ட அமைப்பு செயலாளர் பி.தங்கமணி மற்றும் எஸ்யுஇஎ செயலாளர் அன்பரசு, என்எப்டிஇ – என்எப்டிஇஇ செயலாளர் எம்.பிரிட்டோ அலெக்சாண்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: