திருவள்ளூர்:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றி வருபவர்களுக்கு வேலையில்லா கால இழப்பீட்டுத் தொகையாக 15 நாட்களுக்கான சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஜூலை 24 அன்று திருவள்ளூர் மீரா திரையரங்கம் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் நிறுத்தப் பட்டுள்ள நூறு நாள் வேலையை பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும், வேலையில்லா கால இழப்பீடு தொகையாக 15-நான் சம்பளத்தை வழங்க வேண்டும், கிராம சபை கூட்டத்தில் தீர்மானிக்க வேண்டிய நூறு நாள் வேலை திட்டத்தை சட்ட விரோதமாக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டத்தை வாபஸ் வாங்கு, தொழிலாளர்களுக்கு வரவேண்டிய கூலி பணத்தில் ஒப்பந்ததாரர்கள் கொள்ளையடிக்க சாதகமாக பாலம், சாலை அமைக்கும் வகையில் மாற்றியுள்ளதை தடுக்க வேண்டும், நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும், ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை ரூ.500 தினக்கூலியாக வழங்க வேண்டும் உள்ளிட்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஜூலை 24 அன்று திருவள்ளூரில் தொடர் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.ஜி.கண்ணன் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் அ.து.கோதண்டன், மாவட்டப் பொருளாளர் எம்.கருணா, மாவட்ட துணை நிர்வாகிகள் இ.தவமணி, மனோன்மணி, தேவிகலா, ஜி.ரவி, முனிவேல்ராஜா உட்பட பலர் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.