திண்டுக்கல்;
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தையொட்டி திண்டுக்கல்லில் 150 டன் சின்ன வெங்காயம் தேக்க மடைந்துள்ளது. இதனால் கிலோ ரூ.20 முதல் ரூ.40 வரை விலை வீழ்ச்சியடைந்துள்ளது. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மத்திய பாஜக அரசைக் கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வரு கிறார்கள். இதனையொட்டி திண்டுக்கல்லிலும் வேலை நிறுத்தம் நடை பெற்று வருகிறது. திண்டுக்கல் வெங்காயப் பேட்டையில் வாரத்தில் 3 தினங்கள் வெங்காயச் சந்தை
நடைபெறும். இந்த சந்தைக்கு விவசாயிகள் திண்டுக்கல், வேடசந்தூர், தாராபுரம், தேனி, கம்பம் உள்ளிட்ட பல பகுதி களிலிருந்து வெங்காயங்களை விற்பனை செய்வதற்கு கொண்டு வருவது வழக்கம்.

ஒவ்வொரு நாளும் 50 முதல் 60 டன் வரை வெங்காயம் விற்பனைக்கு வரும்.
தற்போது லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் மாவட்டத்தில் விளையும் வெங்காயத்தை வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி
வைக்க முடியவில்லை. கடந்த வாரத்தில் 1 கிலோ 40 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனையான சின்ன வெங்காயம் 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் வெங்காய பேட்டையில் 150 டன் சின்ன வெங்காயம் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலை படுவீழ்ச்சி அடைந்துள்ளது என விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.