ஆல்வார் :

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில் மாட்டு பண்ணை நடத்தி வந்த ரக்பார் கான் என்பவரை பசு பாதுகாப்பு என்ற பெயரில் மர்ம கும்பல் ஒன்று கடந்த சனிக்கிழமையன்று கொலை வெறித்தாக்குதல் நடத்தியது. தகவல் அறிந்து சம்பவ இடத்தை அடைந்த காவல்துறை படுகாயமடைந்தவரை மீட்பதில் காலதாமதம் செய்தனர். பின்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரக்பார் கான் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை அறிவித்தது.

இதன்பின்பு நேற்று அமைக்கப்பட்ட உயர்மட்ட விசாரணை குழு கொலை செய்யப்பட்டவரின் உறவினர்களிடமும், அப்பகுதியில் வசிப்பவர்களிடமும் மற்றும் காவலர்களிடமும் விசாரணை நடத்தியுள்ளது. இந்த கொலைக்கு இந்து மதவாத அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்தவர்கள்தான் முதன்மைக் குற்றவாளிகள் என காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவரை காப்பாற்ற காலதாமதம் செய்த துணை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தாக்குதலில் இருந்து தப்பியோடிய கொலை செய்யப்பட்டவரின் நண்பர் அஸ்லாம் கான் கொலை கும்பலுக்கு உள்ளூர் எம்.எல்.ஏ_வின் ஆதரவு இருப்பதாக தெரிவித்ததைக் போலீசாரிடம் கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.