புதுதில்லி, :

மேற்குவங்கத்திலும், திரிபுராவிலும் ஜனநாயகப் படுகொலைகள் நடைபெறுவதைக் கண்டித்து தலைநகர் தில்லியில் செவ்வாயன்று கண்டன முழக்கம் எழுப்பினார்கள்.

கேரள மாநில இடது ஜனநாயக முன்னணியின் முதல்வர் பினராணி விஜயன், திரிபுரா முன்னாள் மாநில முதல்வர் மாணிக் சர்க்கார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, இந்தியக் கம்யூனீஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) பொதுச் செயலாளர் திபங்கர், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா முதலானோர் கண்டன உரையாற்றினார்கள். இதேபோன்று நாடு முழுதும் பல்வேறு மையங்களிலும் கண்டனப் பேரணிகள்/ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.