சேலம்,
ஓமலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண், உடல் ஊனமுற்ற நிலையில் அவரது தாயார் அரவணைப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஞாயிறன்று அவரது தாயார் வழக்கம்போல் கரும்பு ஆலைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட அப்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையறிந்த அதேபகுதியை சேர்ந்த ஒருவர் அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதன்பின் வீட்டின் பின்புறமுள்ள சோலகாட்டில் தூக்கி சென்று அவரிடம் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இளம்பெண்ணின் தாயார் இரவு வீடு திரும்பிய நிலையில் தனது மகளின் ஆடைகள் கிழிந்து கிடப்பது தொடர்பாக கேட்டுள்ளார். அப்பொழுது தனக்கு  நேர்ந்த கொடுமைகள் தொடர்பாக அப்பெண் சைகையில் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் தாயார் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கூட்டி சென்ற நிலையில், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஓமலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: