மத்திய பிரதேசத்தில் ஓடும் ரயிலில் நீதிபதியிடம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரேவாவிலுள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக ஆர்டி சுக்லா பாண்டே பணியாற்றி வருகிறார். இவர் இந்தூர்-ஜபல்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் வண்டியில் எச்-1 கோச்சில் பயணித்துள்ளார். அதிகாலை சுமார் 4.30 மணியளவில் நார்சிங்பூர் சென்றபோது அடையாளம் தெரியாத 4 மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். நீதிபதியிடமிருந்து ரூ10,000 மற்றும் ஏ.டி.எம் கார்டையும் திருடிச்சென்றுள்ளனர். மேலும் அதே ரயிலில் பயணித்த மூன்று பெண்களிடம் நகை, பணம் மற்றும் செல்போன் அனைத்தையும் கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசரனை நடத்திவருகின்றனர். மேலும் கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்களின் மெத்த மதிப்பு 3 லட்சம் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நீதிபதியிடம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: