நாட்டின் முக்கிய நகரங்களில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய ஆடிட்டர்கள் 204 பேர் தங்களது பணியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 17 வரை இந்த பதவி விலகல்கள் நடந்துள்ளன. அதாவது ஒவ்வொரு நாளும் ஒரு ஆடிட்டர் ராஜினாமா செய்திருக்கிறார். இதற்கு காரணம் என்ன என்பது முக்கியமானது.

மோடி அரசாங்கத்துடன் கூட்டுக் களவாணித்தனத்தில் ஈடுபட்டுள்ள பெரும் கார்ப்பரேட்டுகள், மோடி அரசாங்கத்தின் கீழ் தங்களுக்கு நிச்சயமான பாதுகாப்பு உண்டு என்ற எண்ணத்தில் எந்தக் கணக்கும் வழக்குமின்றி எல்லாவிதமான தவறுகளையும் செய்து வருகின்றன. வங்கிகளில் வாங்கிய கடன்களை எந்தவிதத்திலும் திருப்பிச் செலுத்துவதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களது நிறுவனத்தின் ஆடிட்டர்களுக்கு கூட முறையான தகவல்களை அளிப்பது இல்லை. எல்லாமே ஏமாற்றுக் கணக்குகள். கடந்த நான்காண்டுகளில் மோடி அரசு கட்டமைத்த புதிய இந்தியா இதுதான். எந்தக் கணக்கும் இல்லாமல் எப்படி ஆடிட்டர்கள் வேலை பார்ப்பார்கள்… எனவே ராஜினாமா செய்துவிட்டார்கள்.

Leave A Reply

%d bloggers like this: