சென்னை,
4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம், தொலை தொடர்பு ஊழியர் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட 11 சங்கங்களின் சார்பில் நாடு முழுவதும் 3 நாட்கள் நடைபெறும் உண்ணாநிலைப் போராட்டம் செவ்வாயன்று (ஜூலை 24) தொடங்கியது. பி.எஸ்.என்.எல்.-இல் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் ஊதிய மாற்றம் செய்ய வேண்டும், இந்திய அரசு உத்தரவுப்படி அவர் வாங்கும் அடிப்படை ஊதியத்தில் ஓய்வூதியத்திற்கான பங்கீட்டு தொகையை பிடித்தம் செய்ய வேண்டும், 4 ஜி சேவையை உடனே வழங்க வேண்டும், ஓய்வூதியதாரர்களுக்கும் உடனடியாக 1.1.2017 முதல் ஓய்வூதிய மாற்றம் செய்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சிஜிஎம் அலுவலக வளாகத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எம்.கன்னியப்பன் தலைமையில் இந்தப் போராட்டம் தொடங்கியது. தொலை தொடர்பு ஊழியர் தேசிய கூட்டமைப்பு மாநில செயலாளர் சி.கே.மதிவாணன், மாநிலச் செயலாளர் ஏ.சண்முகசுந்தரராஜன் (எஸ்.என்.இ.ஏ), ஜெ.பத்ரிநாராயணன் (ஏ.ஐ.பி.எஸ்.என்.எல்.இ.ஏ), ஜெ.விஜயகுமார் (டி.இ.பி.யு), ஆர்.ரவீந்திரன் (ஏ.ஐ.ஜி.இ.டி.ஓ.ஏ), டி.காசி (என்.எப்.டி.சி.எல்), மாவட்ட செயலாளர்கள் வி.லதா, வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.