திருப்பூர்,
நூறுநாள் வேலை திட்டத்தின் சட்டவிதிகளை அமல்படுத்து வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நூறுநாள் வேலைதிட்ட நிதி ரூ. 600 கோடியை, சுய உதவிக்குழுக்களுக்கும் கிடங்குகள் கட்டுமானத்திற்கு வழங்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும், கட்டிடங்களைக் கட்டுவதற்கு ஒப்பந்தாரர்களை அனுமதித்து திட்டத்தை சீர்குலைக்கக்கூடாது. நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் நிலத்தடி நீரை உயர்த்துவதற்கும் விவசாயம் சார்ந்த பணிகளுக்கும் விரிவுபடுத்தவேண்டும்.  ஊராட்சிகளில் 20 அல்லது 30 பேருக்கு மட்டுமதான் வேலை வழங்கப்படும் என்பதை மாற்றி வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். நிலுவையிலுள்ள சம்பளபாக்கிகளை உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும், நூறு நாள் வேலைதிட்டத்தில் சட்டவிதிகளை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏ.பஞ்சலிங்கம், மாவட்ட நிர்வாகிகள் எ.சண்முகம், ஆர்.ஆறுமுகம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.மதுசூதணன் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினர். இந்த போராட்டத்தில் 600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்பு மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.